ADDED : மார் 22, 2024 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், கோவை 4வது தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா மற்றும் பதவி உயர்வு வழங்கும் விழா நடந்தது.
தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவுக்கு, ஹயக்ரீவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருள்மொழி பங்கேற்றார்.
கல்லுாரி முதல்வர் கண்ணன், தேசிய மாணவர் படை மாணவர் அதிகாரி பிரகாஷ், கேர்டேக்கர் பவித்ரா, மாணவி தேவிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

