/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர விருப்பம் சைனா வேலி உணவகத்தில் ஜப்பானிய உணவுத்திருவிழா
/
விளம்பர விருப்பம் சைனா வேலி உணவகத்தில் ஜப்பானிய உணவுத்திருவிழா
விளம்பர விருப்பம் சைனா வேலி உணவகத்தில் ஜப்பானிய உணவுத்திருவிழா
விளம்பர விருப்பம் சைனா வேலி உணவகத்தில் ஜப்பானிய உணவுத்திருவிழா
ADDED : செப் 07, 2024 01:48 AM
கோவை:கோவை, திருச்சி ரோட்டில், சைனா வேலி சீன உணவகம் துவங்கி 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வரும் 15ம் தேதி வரை, ஜப்பானிய உணவு திருவிழா நடத்தப்படுகிறது.
ஜப்பானிய உணவு வகைகளில் பரந்த அனுபவம் கொண்ட, கோல்கட்டாவை சேர்ந்த சமையல் கலைஞரான நிரஞ்சன், பல்வேறு ஜப்பான் உணவு மெனுக்களை தயாரித்து வழங்குகிறார்.
சுஷி மற்றும் டிம்சம் முதல் ஹார்டி ரேமன், ஈபி டெம்புரா, பாவ், மோச்சி ஐஸ்கிரீம், டோராயகி மற்றம் பலவிதமான ஜப்பானிய உணவுகளை சுவைக்கலாம்.
திருச்சி ரோட்டில் கனரா வங்கிக்கு அருகில், அமைந்துள்ள சைனா வேலி உணவகத்தில், காலை 11:30 முதல் மாலை 3:30 மணி, மாலை 6:45 மணி வரை மற்றும் மாலை முதல் இரவு 10:45 வரை நடக்கும் உணவுத் திருவிழாவில், உணவுகளை சுவைக்கலாம்.
சைனா வேலியின் ஆண்டு விழா, தரம் மற்றும் புதுமைக்கான உணவகத்தின் அர்ப்பணிப்புக்கான சான்று என தெரிவித்துள்ள நிர்வாகம், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வது அவசியம் என தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, 0422 - 427 3279, 230 3279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.