/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவிகளுக்கு புரொப்பெல் இன்டஸ்ட்ரீஸ் உதவித்தொகை
/
மாணவிகளுக்கு புரொப்பெல் இன்டஸ்ட்ரீஸ் உதவித்தொகை
ADDED : ஜூலை 30, 2024 01:31 AM

கோவை;புரொப்பெல் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சி.எஸ்.ஆர்., நிதியில், ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளியில் படித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வித்தொகைவழங்கியுள்ளது.
புரொப்பெல் கிராஜூவேட் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், மூன்று ஆண்டுகளுக்கான கல்லுாரி கட்டணத்தை முழுமையாக செலுத்த உதவித் தொகை வழங்கப்படும்.
பெற்றோர்களின் ஆண்டு வருமானம், மதிப்பெண்கள், குடும்ப சூழ்நிலை, கற்றல் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இத்திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டுக்கான உதவி தொகையானது அரசு பள்ளியில் படித்து கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் படிக்கும் மாணவிகளான பூர்ணிமா மற்றும் ராஜேஸ்வரிக்கு வழங்கப்பட்டது.