/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேசத்தில் ஹிந்துக்களை காப்பது நம் பொறுப்பு: சத்குரு
/
வங்கதேசத்தில் ஹிந்துக்களை காப்பது நம் பொறுப்பு: சத்குரு
வங்கதேசத்தில் ஹிந்துக்களை காப்பது நம் பொறுப்பு: சத்குரு
வங்கதேசத்தில் ஹிந்துக்களை காப்பது நம் பொறுப்பு: சத்குரு
ADDED : ஆக 07, 2024 11:15 PM
தொண்டாமுத்துார்:'வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு. இதில் நம் பாரத நாடு விரைந்து செயல்பட வேண்டும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கூறியுள்ளதாவது:
ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டு பிரச்னை அல்ல. நம் அண்டை நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்காக, நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால் பாரதம், மஹாபாரதமாக இருக்க முடியாது.
இந்த நாட்டின் அங்கமாக இருந்த அந்நாடு, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகி விட்டது. ஆனால், நிஜத்தில் இந்த நாகரிகத்தை சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு.
மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை, ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்.
இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.