/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
/
வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 02, 2025 04:18 AM
பெ.நா.பாளையம்: வனவிலங்குகளின் ஊடுருவலை தடுக்கக் கோரி, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் வரும் 4ம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில், யானைகளை வனத்துக்கு வெளியே வராமல் தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்தும், உடனடியாக யானைகளை தடுக்க கோரியும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரக அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக வரும் 4ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கப்படும். காத்திருப்பு போராட்டம் நடத்த பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது, என்றார்.