ADDED : ஜூலை 13, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
கோவை: அரசு மருத்துவமனையில் பல வார்டுகளில், குடிநீர், கழிவறை அமைப்புகள் போதிய அளவில் இல்லை, துாய்மைப்பணிகள் முறையாக செய்வதில்லை, ஒப்பந்த பணியாளர்கள் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
