/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., நர்ஸிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
பி.எஸ்.ஜி., நர்ஸிங் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 02, 2024 05:10 AM

கோவை : பி.ஸ்.ஜி., நர்ஸிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா பி.எஸ்.ஜி., மருத்துவமனை கலையரங்கில் நடந்தது. இதில், 93 இளங்கலை மற்றும், 7 முதுகலை பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
மங்களூர் மணிபால் செவிலியர் கல்லூரியின் டீன் டாக்டர் ஜூடித் ஏஞ்சலிட்டா நோரோன்ஹா பேசுகையில்,''உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது நர்ஸ்களின் நோக்கமாக இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு, கருணை, மற்றும் மனிதநேயத்துடன் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும். மாற்றங்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி., நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து, கல்லூரி இதழை வெளியிட்டார்.
பொறுப்பாளர் பேராசிரியர் மீரா சரவணன் வரவேற்றார். பி.எஸ்.ஜி., மனநல செவிலியர் துறையின் இணைபேராசிரியர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. தலைமை விருந்தினராக கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் துணை செவிலியர் கண்காணிப்பாளர் சங்கீதா பங்கேற்றார். முன்னாள் மாணவர்கள், 95 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.