/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்வர்டைசிங் கிளப்புடன் பி.எஸ்.ஜி., புரிந்துணர்வு
/
அட்வர்டைசிங் கிளப்புடன் பி.எஸ்.ஜி., புரிந்துணர்வு
ADDED : டிச 07, 2024 06:21 AM

கோவை; விளம்பரத்துறையில் புதிய டிஜிட்டல் தொழில் நுட்பங்களை, கல்லுாரி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக, பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி மற்றும் கோயம்புத்துார் அட்வர்டைசிங் கிளப் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி அரங்கில் நடந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக தி இந்து குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி நவ்னீத், பிரிட்டன் ரீட்ஸ் பெக்கட் பல்கலையின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சான் டாட்ஸன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய சான்றிதழ் பாடத்திட்ட ஒப்பந்தத்தில், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரியின் இயக்குனர் ஸ்ரீவித்யா மற்றும் கிளப் தலைவர் சிவகுமார் கையெழுத்திட்டனர்.
சான்றிதழ் பாடத்திட்டத்தில், விளம்பரம் மற்றும் வியாபார யுக்தி, பிராண்ட் மேலாண்மை, நேரடி மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பயிற்சிகள், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் விளம்பரத் தொழில் துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு நடத்தப்படும்.
விபரங்களுக்கு, 77080 99981 என்ற எண்ணில் அழைக்கலாம் என, கோயம்புத்துார் அட்வர்டைசிங் அகாடமி இயக்குனர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோயம்புத்துார் அட்வர்டைசிங் கிளப் சார்பில் செயலாளர் அபெக் மீடியா பாலகிருஷ்ணன், பொருளாளர் பிரன்ட் பேஜ் கம்யூனிகேஷன்ஸ் ஜெயக்குமார் மற்றும் பேம் ஈவன்ட்ஸ் ஜெஸ்டின் ஆகியோர் பங்கேற்றனர்.