/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : ஆக 06, 2024 11:09 PM

கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் பி.இ., பி.டெக்., துறையின் பொன்விழா ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, நேற்று கல்லுாரி அரங்கில் நடந்தது.
இதில், கடந்த 1974ம் ஆண்டு பி.இ., பி.டெக்., படித்த மாணவர்கள் பங்கேற்றனர். தவிர, அத்தருணத்தில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களும் பங்கேற்றனர்.
தொழில்நுட்ப வசதி இல்லாமலே, 50 ஆண்டுகள் நட்பை தொடர்ந்த நண்பர்கள், நேற்று சந்தித்து கொண்டனர். 10 பேர் வெளிநாடுகளில் இருந்தும், சிலர் இந்நிகழ்வில் நண்பர்களை காண வந்திருந்தனர்.
முதுமையை எட்டிய நிலையிலும், நண்பர்களை அதே தோரணையில் அழைத்து நினைவு கூர்ந்து, மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். நிகழ்வில், ஒவ்வொருவரும் கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களையும் கவுரவித்தனர்.
இதில், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மயில்சாமி, நிர்வாகிகள் பிரகாசம், அரசு, பி.எஸ்.ஜி., கல்லுாரி இயக்குனர் ருத்ரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.