/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணியாளர்களுக்கு உளவியல் பிரச்னை மனநல ஆலோசனை அவசியம்
/
பணியாளர்களுக்கு உளவியல் பிரச்னை மனநல ஆலோசனை அவசியம்
பணியாளர்களுக்கு உளவியல் பிரச்னை மனநல ஆலோசனை அவசியம்
பணியாளர்களுக்கு உளவியல் பிரச்னை மனநல ஆலோசனை அவசியம்
ADDED : செப் 11, 2024 02:45 AM
பொள்ளாச்சி:அரசு மருத்துவமனை அனைத்து தரப்பு பணியாளர்களும், உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.
இங்கு, டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என, அதிகப்படியானவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சிலர், தனக்கான சுய மனக் குழப்பத்தை பணியின்போதும் வெளிகாட்டுவதால், நோயாளிகள் மட்டுமின்றி சக பணியாளர்களும் பாதிக்கின்றனர்.
குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை, பணி நேரத்தின் போது, மொபைல்போன் வாயிலாக அசை போடுவதால், நோயாளிகளிடம் கடிந்து கொள்கின்றனர். இதனால், சக பணியாளர்களும் செய்வதறியாது திணறுகின்றனர்.
மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது: மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கூடுதல் பணிப்பளு இருந்தாலும், சிலர் அவரவரின் தனிப்பட்ட பிரச்னைகளை பணியின் போது வெளிக்காட்டுகின்றனர். இதனால், அவ்வப்போது, முக்கிய பணிகளும் முடங்குகின்றன.
இது ஒருபுறமிருக்க, குடும்ப பிரச்னையை எதிர்கொள்ள முடியாத பணியாளர்கள், 'ஷிப்ட்' முடிந்து வீடு திரும்புவதை தவிர்த்து, தொடர்ந்து பணியில் நீடிக்கின்றனர். இதனால், பிற பணியாளர்கள் செய்தவறியாது திணறுகின்றனர். இத்தகைய செயலில் ஈடுபடும் பணியாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலம், வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே, மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து தரப்பு பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். ஏதேனும் ஒரு வேளையில், யோகா பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.