/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்பெண்கள் மட்டும் வாழ்வை தீர்மானிக்காது; மாணவர்களுக்கு மனநல மருத்துவர் அறிவுரை
/
மதிப்பெண்கள் மட்டும் வாழ்வை தீர்மானிக்காது; மாணவர்களுக்கு மனநல மருத்துவர் அறிவுரை
மதிப்பெண்கள் மட்டும் வாழ்வை தீர்மானிக்காது; மாணவர்களுக்கு மனநல மருத்துவர் அறிவுரை
மதிப்பெண்கள் மட்டும் வாழ்வை தீர்மானிக்காது; மாணவர்களுக்கு மனநல மருத்துவர் அறிவுரை
ADDED : மே 06, 2024 11:47 PM
கோவை;மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வை தீர்மானிக்காது, தோல்வி அடைந்தாலும் வெற்றிக்கு வழி உள்ளது என, மூத்த மனநல மருத்துவர் சீனிவாசன் தெரிவித்தார்.
தேர்வு என்றாலே இன்று மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. 'நீ டாக்டராக மட்டும் தான் ஆக வேண்டும்' 'நீ நல்ல மார்க் எடுத்தால் தான் பிற மாணவர்கள் போல் நல்ல நிலைக்கு செல்ல முடியும்' இப்படி பெற்றோரின் நிர்பந்தங்களும், உறவினர்களின் அறிவுரைகளும் மாணவர்களுக்கு ஒரு வித மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதேநிலையில் இருக்கும் மாணவர்கள் தேர்வில் ஒரு சில மதிப்பெண்கள் குறைந்தாலும், மன உளைச்சலுக்கு உள்ளாகி, தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வை தீர்மானிக்காது என்கிறார் மூத்த மனநல மருத்துவர் சீனிவாசன்.அவர் கூறியதாவது:
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் ஒரு வெற்றி மறைந்துள்ளது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதைத்தாண்டியும், வாழ்க்கை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களுடனே இருக்க வேண்டும். தனியாக விடக்கூடாது. மதிப்பெண்கள் குறைந்திருந்தால் அதை குறையாக கூறக்கூடாது.
நீ உன்னுடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாய், அதன் பலன் தான் இது. எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க அறிவுறுத்த வேண்டும். இன்று தோல்வி அடைந்தால் அதில் தேர்ச்சி பெற உடனடி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
வாழ்விலும் இதுபோல், நடக்கும் அதற்கு தயாராக வேண்டும். எதிர்பார்த்த அனைத்தும் நடக்காது. அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.