/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு
100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு
100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ADDED : ஏப் 08, 2024 10:20 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு வட்டாரத்தின் சார்பில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, நியூ ஸ்கீம் ரோடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக சென்று, தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.
உதவி திட்ட அலுவலர்கள் சாந்தசீலன், அசோகன், கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். வருவாய்துறை அதிகாரிகள், வடக்கு, தெற்கு ஊரக வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி வேளாண்துறை சார்பில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி, காந்தி மார்க்கெட்டில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். தாசில்தார்கள் ஜெயசித்ரா, ரேணுகாதேவி மற்றும், வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஓவியங்களில், காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாசுதேவன்,சிவக்குமார் தலைமையில், விழிப்புணர்வு பேட்ஜ் மற்றும் தொப்பி அணிந்து அனைத்து அலுவலர்களும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேர்தலில், அனைவரும் ஓட்டு அளிக்க வேண்டும்; 100 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கை அடைய முயற்சிகள் எடுப்போம் என வலியுறுத்தப்பட்டது.

