sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

/

குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

குழந்தை திருமணத்தை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு; மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்


ADDED : மே 29, 2024 11:49 PM

Google News

ADDED : மே 29, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு, பொதுமக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாநில அளவில், வளர் இளம் பருவத்தில் தாய்மார்களாக மாறும், இளம் பெண் பட்டியலில் திருப்பூர் மாவட்டமும் முதன்மையாக உள்ளது. குழந்தை திருமணம் அதிகம் நடப்பதே, முக்கிய காரணமாக உள்ளது.

குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த, பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது:

பெண் குழந்தைகளுக்கு, 18 வயதுக்கு முன்பும், ஆண்களுக்கு 21 வயதுக்கு முன்பாகவும் நடப்பது குழந்தை திருமணமாக உள்ளது. குழந்தை திருமணத்தால், வளர் இளம் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகள், இளம் வயதில் கருத்தரிக்கின்றனர்.

இதனால் அதிகமான கருச்சிதைவு ஏற்படுகிறது. பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு, எடை குறைவான குழந்தைகள் பிறப்பது, மனவளர்ச்சி இல்லாமல் குழந்தை பிறப்பது, தாய், சேய் இருவருக்கும் ஆபத்தான சூழலாக மாறுவது உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுகிறது.

குழந்தை திருமண தடை சட்டத்தின் படி, அந்த திருமணத்தை நடத்தியவர்கள், செய்ய துாண்டியவர்கள், அதில் பங்கேற்பவர்களும் குற்றவாளிகளாக கருதப்படுகிறது.

இதில் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமாகவும், இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் திருமண மண்டபங்கள், கோவில்களில் திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருவோரிடம் மணமகன், மணமகளின் ஆதார் அட்டை வாயிலாக, பிறந்ததேதி, நிரந்தர முகவரியை உறுதி செய்த பின்னர்தான் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

பொதுமக்களும் குழந்தை திருமணத்தை தடுக்க, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடப்பதை அறிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம், மாவட்ட சமூக நல அலுவலர், சைல்டு லைன் 1098, பெண்கள் உதவி மையம் 181 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை கூறி புகார் பதிவு செய்யலாம்.

மேலும், அந்த ஊராட்சிக்குட்பட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடமும், புகார் அளிக்கலாம்.

அக்குழுவில், ஊராட்சித்தலைவர், சமூக நல விரிவாக்க அலுவலர், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், வருவாய் அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் நபர்களின் பெயர்கள் ரகசியமாகவே பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us