/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
நிழற்கூரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 18, 2024 04:51 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பயணியர் நிழற்கூரையை அதிகளவிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிக்கலாம்பாளையத்தில் இருந்து சொக்கனுார் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளுக்கு இங்கிருந்து பயணம் செய்கின்றனர். தற்போது இந்த நிழற்கூரையின் மேற்பகுதி கான்கிரீட் பூச்சுக்கள் சேதமடைந்து உள்ளது.
நிழற்கூரை இடியும் தருவாயில் இருப்பதால், நிழற்கூரையில் நிற்க பயந்து கொண்டு, மக்கள் வெளிப்புறத்தில் காத்திருக்கின்றனர். மேலும், நிழற்கூரையில் இரவு நேரத்தில், ஆபத்தை உணராமல் சிலர் மது அருந்திவிட்டு துாங்குகின்றனர்.
மேலும், நிழற்கூரை மேற்பரப்பில் உள்ள சுவற்றில் தேர்தல் விதிமுறையை மீறி கட்சி விளம்பர போஸ்டர்களும் அகற்றப்படாமல் உள்ளது. போஸ்டர்களை அகற்றம் செய்து, நிழற்கூரையின் மேற்பகுதியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

