/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் பணிகள் நிலுவை பொதுமக்கள் அதிருப்தி
/
குடிநீர் பணிகள் நிலுவை பொதுமக்கள் அதிருப்தி
ADDED : ஆக 17, 2024 12:40 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் குழாய் மற்றும் மோட்டார் அமைக்கும் பணி நிலுவையில் உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பல ஊராட்சிகளில், தற்போதும் தண்ணீர் பிரச்னை பிரதானமாக உள்ளது. இதில், ஊராட்சி பகுதிகளில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு, கனிமம் மற்றும் சுரங்க நிதி, 15வது நிதி குழு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய போர்வெல் அமைப்பது, மோட்டார் மற்றும் குழாய் அமைக்க கடந்த ஜூன் மாதம் மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
ஆனால் இரண்டு மாதங்கள் கடந்தும், இந்த பணிகள் துவங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது பெய்த மழையால், போர்வெல்லில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மக்கள் அனைவருக்கும் குறைவான அளவு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் சிலர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
மேலும், கிராமப்புறங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் உடனடியாக போர்வெல் மற்றும் குழாய் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், என, ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

