/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் அதிருப்தி
/
போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் அதிருப்தி
ADDED : மே 20, 2024 11:27 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே வடசித்தூர் செல்லும் ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கிணத்துக்கடவு, வடசித்தூர் செல்லும் ரோட்டில் கடைகள் மற்றும் வீடுகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள கடைகள் அனைத்தும் ரோட்டில் இருந்து இரண்டு அடிக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் 'பார்க்கிங்' செய்கின்றனர்.
'பார்க்கிங்' செய்யும் இடத்தில் வடசித்தூர், காட்டம்பட்டி மற்றும் நெகமம் செல்லும் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்கு வரும் பஸ், வாகனங்கள், ரோட்டை ஆக்கிரமித்து 'பார்க்கிங்' செய்யப்பட்டது. இதனால் அவ்வழியில் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.
மேலும், கனரக வாகனங்கள் வடசித்தூரில் இருந்து, கிணத்துக்கடவு வரும் போது, இங்கு நிறுத்தப்படும் பஸ் மற்றும் பிற வாகனங்களால் ரோட்டில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, இங்கு வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

