/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம் : 52 மனுக்களுக்கு தீர்வு
/
மக்கள் குறைதீர் கூட்டம் : 52 மனுக்களுக்கு தீர்வு
ADDED : மார் 06, 2025 12:29 AM
கோவை:
மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில், 52 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது
பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, விசாரணை மற்றும் ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது அதிருப்தி உள்ளவர்களின் மனுக்கள் மீதான, மறு விசாரணை ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த குறைதீர் முகாமில் குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை, இடப்பிரச்னை தொடர்பாக, 60 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.
அதில் 52 மனுக்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது; 5 மனுக்களுக்கு மேல் விசாரணை, 3 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
குறைதீர் கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி., துணை எஸ்.பி., ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.