/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
/
சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
ADDED : ஜூன் 22, 2024 11:50 PM

கோவை;தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி, மனு கொடுத்தனர். போராட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சுமதி தலைமை வகித்தார்.
அப்போது, சுகாதார செவிலியர்கள் கூறியதாவது:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணியை, சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
தாய் சேய் நலப்பணி, தடுப்பூசி மற்றும் குடும்ப நலப்பணிகளை சுகாதார செவிலியர்கள் செவ்வனே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கியுள்ள பணிகளுக்கு முரணாக, அரசு உத்தரவுக்கு மாறாக, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி செய்யச் சொல்லி மிரட்டுவது, அச்சுறுத்துவதை கைவிட வேண்டும். ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் நியமிக்க வேண்டும். ஆண் சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல், பெண் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.