/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவு அருகே சேதமடைந்த ரோடால் பொதுமக்கள் அவதி
/
கிணத்துக்கடவு அருகே சேதமடைந்த ரோடால் பொதுமக்கள் அவதி
கிணத்துக்கடவு அருகே சேதமடைந்த ரோடால் பொதுமக்கள் அவதி
கிணத்துக்கடவு அருகே சேதமடைந்த ரோடால் பொதுமக்கள் அவதி
ADDED : பிப் 10, 2025 05:49 AM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கல்லாபுரம் -- மீனாட்சிபுரம் செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால்,1 வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள, கல்லாபுரத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் வழித்தடத்தில், நாள்தோறும் அதிகளவு விவசாயிகள் வாகனங்களில் செல்கின்றனர். இந்த ரோடு, 2014 - 15ம் ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த ரோடு குண்டும் குழியுமாகி இருப்பதால், மக்கள் இந்த வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தது வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
மக்கள் கூறுகையில், 'இந்த ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்கள் எடுத்து செல்ல சிரமப்படுகின்றனர். இதனால், இந்த ரோட்டில் பயணிப்பதை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ரோட்டை ஆய்வு செய்துள்ளோம். மேலும், முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக, சீரமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் ரோடு சீரமைக்கப்படும்,' என்றனர்.