/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செஞ்சேரியில் ரூ.1.89 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
/
செஞ்சேரியில் ரூ.1.89 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
ADDED : ஏப் 27, 2024 01:24 AM

சூலுார்:செஞ்சேரி மலையடிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.1.89 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரி மலையடிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்த, மார்ச், 14 முதல் கொப்பரை கொள்முதல் நடந்து வருகிறது.
4 ஆயிரத்து, 500 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கொள்முதல் நடந்தது. அரவை கொப்பரை, கிலோ ஒன்றுக்கு, 111.60 ரூபாய்க்கும், பந்து கொப்பரை, 120 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
ஏப்., 24 ம்தேதி வரை, 142 விவசாயிகளிடம் இருந்து, தலா, 50 கிலோ கொண்ட, 3 ஆயிரத்து, 399 மூட்டை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 1 கோடியே, 89 லட்சத்து, 66 ஆயிரத்து, 420 ரூபாய் ஆகும், என, அதிகாரிகள் கூறினர்.
வெளி மார்க்கெட்டை விட, கூடுதல் விலைக்கு, ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுவதால், சுற்றுவட்டார விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.

