/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.20.65 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
/
ரூ.20.65 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
ADDED : ஜூன் 15, 2024 12:12 AM
நெகமம்:நெகமம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், ஆதார விலை திட்டத்தின் வாயிலாக, விவசாயிகள் கொப்பரை விற்பனை செய்து வந்தனர். இத்திட்டமானது, கடந்த 10ம் தேதியுடன் நிறைவடைந்தது.
கொப்பரை ஒரு கிலோ, 111.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. விற்பனை கூடத்தில், மொத்தமாக, 1,940.45 மெட்ரிக் டன் அளவு கொப்பரை, 20.65 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 1,536 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
விவசாயிகள் கூறுகையில், 'ஆதார விலை திட்டத்தின் வாயிலாக, அதிக விலைக்கு கொப்பரை விற்பனை செய்து வந்தோம். விவசாயிகள் நலன் கருதி இத்திட்டத்தை நீட்டிப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.