/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
/
ஆதார விலை திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
ADDED : ஏப் 26, 2024 11:46 PM
நெகமம்;நெகமம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருக்கும் தென்னை விவசாயிகள், ஆதார விலை திட்டம் மற்றும் 'இ -- நாம்' வாயிலாக கொப்பரையை விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்துகின்றனர்.
இங்கு விவசாயிகளின் விளை பொருட்களை இருப்பு வைத்து, விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனை கூடத்தில், ஆதார விலை திட்டத்தில், ஒரு கிலோ கொப்பரை, 111.60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 3,300 மெட்ரிக் டன் அளவுக்கு கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை, 477.95 மெட்ரிக் டன் அளவு கொப்பரை, 5.33 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 389 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

