/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைப்பாம்பு 'விசிட்' தொழிலாளர் ஓட்டம்
/
மலைப்பாம்பு 'விசிட்' தொழிலாளர் ஓட்டம்
ADDED : ஆக 10, 2024 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை;தேயிலை காட்டில் நடமாடிய மலைபாம்பைக்கண்டு, தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறை அடுத்துள்ளது முருகாளி எஸ்டேட். இங்குள்ள தேயிலை காட்டில் தொழிலாளர்கள் வழக்கம் போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 14 அடி நீளமுள்ள மலைபாம்பு தேயிலை செடிக்கு அடியில் நடமாடுவதை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து, தோட்ட அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்குச்சென்ற வனத்துறையினர், மலைபாம்பை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.