தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தகராறு: சிறுவன் உள்பட நால்வர் கைது

தகராறு: சிறுவன் உள்பட நால்வர் கைது

தகராறு: சிறுவன் உள்பட நால்வர் கைது


ADDED : ஆக 27, 2024 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனுார்: ஆத்துபாலம் அருகேயுள்ள என்.பி. இட்டேரி, வசந்தம் நகரை சேர்ந்தவர் ரஸல், 20. கடந்த, 25ல், குனியமுத்துார் கங்கா நகரிலுள்ள ஒரு கடைக்கு ஜூஸ் வாங்க தனது சகோதரருடன் சென்றார். அங்கு அவர்களுக்கு பழக்கமான இரு பெண்கள் நின்றிருந்தனர்.

இவர்களுக்கிடையே பொருட்கள் வாங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பெண் சத்தமிடவும், அவரது உறவினர்கள் அங்கு வந்து, ரஸல் மற்றும் அவரது சகோதரரை கல்லால் தாக்கினர். இருவருக்கும் தலையில் காயமேற்பட்டது. ரஸல் புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, கங்கா நகரை சேர்ந்த பர்சாத், 31, செல்வபுரம், ரங்கசாமி காலனியை சேர்ந்த சித்திக்பாட்சா, 34, நிசாருதீன் ஆகியோரை கைது செய்தனர்.

அதுபோல் பெண்களின் பாட்டி அர்தாரி ஜான் புகாரில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us