ADDED : செப் 17, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுலின், பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, பொள்ளாச்சியில் நடந்தது. இதையொட்டி, காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நகரத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதில், யாத்திரையின் கீழ் ராகுலின் மக்கள் சந்திப்பு புகைப்பட ஒரு நாள் கண்காட்சியும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினராக எம்.பி., ஈஸ்வரசாமி கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமராஜ், கணேசன், காளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

