/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீலகிரி எக்ஸ்பிரஸில் இன்று முதல் வசதியான எல்.எச்.பி., பெட்டிகள் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ADDED : மார் 03, 2025 04:06 AM

கோவை : மேட்டுப்பாளையம் - சென்னை - மேட்டுப்பாளையம் இடையேயான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் எல்.எச்.பி., பெட்டிகளுடன் இயங்கும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வே, 2018 - -19 நிதியாண்டு முதல், ஐ.சி.எப்., பெட்டிகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளது. அவற்றுக்கு பதிலாக, எல்.எச்.பி., கோச்சுகள் மாற்றப்பட்டுள்ளன. அவை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டவை.
இந்த பெட்டிகள் அதிக வேகத்தில் இயக்கப்படும்; கூடுதல் பயணிகள் பயணிக்க முடியும். இவை எடை குறைவானவை.
உயர்ந்த உட்புறங்கள் மற்றும் குறைந்த பராமரிப்பு தேவை கொண்டவை.
ஒவ்வொரு பெட்டியிலும், மேம்பட்ட நுமேட்டிக் டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதால், அதிக வேகத்திலும் திறன்மிக்க பிரேக்கிங் சிஸ்டமாக செயல்படுகிறது.
எல்.எச்.பி., பெட்டிகளின் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, பயணிகளுக்கு அதிக வசதியை தருகிறது. இதன் காரணமாக, ரயில்களில் உள்ள ஐ.சி.எப்., பெட்டிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு, அவற்றில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் - சென்னை(12672) நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நாளை(மார்ச், 4) முதல் மற்றும் சென்னை - மேட்டுப்பாளையம்(12671) நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன.
இந்த ரயில்களில், ஏ.சி., முதல் வகுப்பு - 1 இரண்டாம் வகுப்பு - 2, மூன்றாம் வகுப்பு - 3, மூன்றாம் வகுப்பு எக்கானமி - 2, படுக்கை வசதி - 8, பொது இரண்டாம் வகுப்பு - 4 என, மொத்தம், 22 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.