/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்
/
பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் இன்று மூடல்
ADDED : ஜூலை 22, 2024 08:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பராமரிப்பு பணிக்காக குஞ்சிபாளையம் ரயில்வே கேட் இன்று மூடப்படுகிறது.
பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் பாதையில், குஞ்சிபாளையத்தில் கிராமங்களுக்கு செல்வதற்கான பாதையில், ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, இன்று, 23ம் தேதி காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மூடப்படுகிறது.
இதற்கு மாற்றாக, சிங்காநல்லுார் - சீனிவாசபுரம் மற்றும் அம்பராம்பாளையம் - சிங்காநல்லுார் வழித்தடங்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.