/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் ஐந்து நாட்களுக்கு மழை எதிர்பார்ப்பு
/
கோவையில் ஐந்து நாட்களுக்கு மழை எதிர்பார்ப்பு
ADDED : மே 15, 2024 01:05 AM
கோவை:எதிர்வரும் ஐந்து நாட்கள் கோவையில், மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி, இன்று, 29 மி.மீ., நாளை 4மி.மீ., 17ல் 32 மி.மீ., 18ல் 30 மி.மீ., 19ம் தேதி 34 மி.மீ., மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 29-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 20-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும்.
காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமாகவும், மாலை நேரம் 50 சதவீதமாகவும் இருக்கும் சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு, 4-16 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்; காற்று பெரும்பாலும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
மழை எதிர்பார்க்கப்படுவதால், நீர்பாசன வசதியுள்ள பகுதிகளில் குறுகிய கால நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யவேண்டும். மேலும், சோளத்திற்கு ஒரு எக்டருக்கு 50 கிலோ யூரியா என்ற அளவில் இரண்டாவது மேலுரமாக இட்டு, மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்பாசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

