/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை பொழிவு குறைந்து கடும் பனிமூட்டம்
/
மழை பொழிவு குறைந்து கடும் பனிமூட்டம்
ADDED : ஆக 01, 2024 10:32 PM

வால்பாறை : வால்பாறையில், மழை பொழிவு குறைந்த நிலையில், தேயிலை எஸ்டேட் பகுதியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
வால்பாறையில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்வதால், சோலையாறு, நீராறு அணைகள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில், மழை பொழிவு ஓரளவு குறைந்த நிலையில், எஸ்டேட் பகுதியில், காலை, மாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது.
வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், கவர்க்கல்,வாட்டர்பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நிலவும் பனிமூட்டத்தால் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு செல்கின்றனர்.
பனி படர்ந்த மலைப்பாதையில் சுற்றுலா பயணியர் பனிமூட்டத்தை கண்டு ரசித்தபடி பயணம் செய்கின்றனர். இதனிடையே எஸ்டேட் பகுதியில் காலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பனி மூட்டத்தால் பணியில் ஈடுபடமுடியாமல் தவிக்கின்றனர்.