/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை; மலைச்சரிவில் வெள்ளம்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை; மலைச்சரிவில் வெள்ளம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை; மலைச்சரிவில் வெள்ளம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை; மலைச்சரிவில் வெள்ளம்
ADDED : மே 20, 2024 11:10 PM

பொள்ளாச்சி:மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பெய்யும் மழையால், வால்பாறை சுற்றுப்பகுதிகளில் உள்ள அருவிகளின் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேபோல், மேற்குத் தொடர்ச்சிமலையில் வால்பாறை சுற்றுப்பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தொடர்ந்து மழை பெய்கிறது.
குறிப்பாக, வால்பாறை சுற்றுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்யும் மழையால், மேல்நீராறு, கீழ் நீராறு, சோலையாறு, மேல்ஆழியாறு, ஆழியாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணியர், ஆங்காங்கே அருவிகளில் வழிந்தோடும் தண்ணீரின் அழகை ரசித்து செல்கின்றனர். நீர்வரத்து அதிகம் உள்ள அருவிகளுக்குச் செல்ல சுற்றுலா பயணியருக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சிமலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. அருவிகளில் அவ்வபோது திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக, வால்பாறைக்குச் செல்லும் மலைப்பாதையை ஒட்டியே ஏராளமான அருவிகள் காணப்படுகின்றன.
சுற்றுலாப் பயணியர் வாகனங்களை நிறுத்தி 'செல்பி', வீடியோ எடுப்பார்கள் என்பதால், அங்கு செல்லக் கூடாது என, அறிவுறுத்தப்படுகின்றனர். ஆறு மற்றும் அருவிகளில் அத்துமீறி குளிப்பதைக் கண்டறிந்து தடுக்க, வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய வனக்குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

