/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்., கோவில் வீதியில் மழைநீர் வடிகால் பணி தீவிரம்
/
எஸ்.எஸ்., கோவில் வீதியில் மழைநீர் வடிகால் பணி தீவிரம்
எஸ்.எஸ்., கோவில் வீதியில் மழைநீர் வடிகால் பணி தீவிரம்
எஸ்.எஸ்., கோவில் வீதியில் மழைநீர் வடிகால் பணி தீவிரம்
ADDED : பிப் 15, 2025 06:53 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி எஸ்.எஸ்., கோவில் வீதியில், மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் வெளியேறும் வகையில், மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட, எஸ்.எஸ்., கோவில் வீதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பகுதியில் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதையடுத்து, அங்கு மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தம், 8.4 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மழைநீர் வடிகால் அமைக்கப்படுவதாக கவுன்சிலர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.