/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவினர் அரங்கேற்றம்
/
ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவினர் அரங்கேற்றம்
ADDED : செப் 01, 2024 10:46 PM

போத்தனூர்:ஒத்தக்கால்மண்டபத்தில் ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவினரின், ஐந்தாவது அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
வேடுவர் குல பெண்ணான வள்ளியை வேடர், வளையல் செட்டியார், கிழவனார் இறுதியாக முருகர் அவதாரம் எடுத்து, பழநியில் வைத்து திருமணம் செய்வார். இந்நிகழ்வை தற்போது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான கும்மியாட்டம் மூலம் பலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில் ராஜகணபதி கலைக்குழுவினர் நவகோடி நாராயண பெருமாள், புற்றிடம் கொண்டீசர் கோவில் மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தினர். மூன்றரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், சிறுமியர், ஆண்கள், பெண்கள் என, 400 பேர் பங்கேற்றனர்.
ஆசிரியர் ஞானபிரகாஷ், துணை ஆசிரியர்கள் கிஷோர், ஆனந்தகுமார், சாந்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பாடகர் நவீன் பிரபஞ்சம், மற்றும் பொதுமக்கள் திரளானோர் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.