/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜிவ் பிறந்தநாள் விழா
/
காங்கிரஸ் அலுவலகத்தில் ராஜிவ் பிறந்தநாள் விழா
ADDED : ஆக 20, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா, மாவட்ட அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்., பொதுச்செயலாளர் கணபதி சிவகுமார் முன்னிலை வகித்தார்.
அகில இந்திய காங்., செயலாளர் மயூரா ஜெயக்குமார், ராஜிவ் காந்தியின் சேவைகள் மற்றும் அவர் தேசத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்து, விளக்கி பேசினார். காங்., மாவட்ட மற்றும் டிவிசன் நிர்வாகிகள், ராஜிவ் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

