/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா - காக்னிசென்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ராமகிருஷ்ணா - காக்னிசென்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராமகிருஷ்ணா - காக்னிசென்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராமகிருஷ்ணா - காக்னிசென்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மே 17, 2024 01:03 AM

கோவை;ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரி - காக்னிசென்ட் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, காக்னிசென்ட் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மாயா ஸ்ரீகுமார் கையெழுத்திட்டனர்.
கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில்,''காக்னிசென்ட் நிறுவனம் சார்பில், கல்லுாரி மாணவியருக்கான நர்ச்சர் ஹெர் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் மாணவியருக்கு வழங்கும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவியருக்கு முதல் நான்கு செமஸ்டர்களில் சுயபரிசோதனை, தலைமைகுணம், தொழில் சார்ந்த முன்னேற்றம் மற்றும் பொருளாதார திட்டமிடலுக்கு இந்த பயிற்சி வழிவகுக்கும்,'' என்றார்.

