/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா அலுமினி கோப்பை; மாணவர்கள் அபார ஆட்டம்
/
ராமகிருஷ்ணா அலுமினி கோப்பை; மாணவர்கள் அபார ஆட்டம்
ADDED : ஏப் 26, 2024 12:20 AM
கோவை;ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி சார்பில் நடந்த அலுமினி கோப்பை விளையாட்டு போட்டியில் மாணவர்கள் அபாரமாக விளையாடி பரிசுகளை வென்றனர்.
ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் 'எஸ்.ஆர்.இ.சி., அலுமினி கோப்பை'க்கான ஆண்கள் ஹாக்கி மற்றும் பெண்கள் த்ரோபால் போட்டி கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
ஹாக்கி போட்டியில் 12 கல்லுாரி அணிகளும், த்ரோபால் போட்டியில் ஏழு கல்லுாரி அணிகளும் பங்கேற்றன. போட்டிகளை முன்னாள் மாணவர் கார்த்திக் துவக்கி வைத்தார்.
இதன் மாணவர் பிரிவு ஹாக்கி போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மாணவர்கள் முதலிடம், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி இரண்டாமிடம், யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரி அணி மூன்றாமிடமும் பிடித்தன.
பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி முதலிடம், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அணி இரண்டாமிடம், பி.ஏ., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி மூன்றாமிடமும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு முன்னாள் மாணவர்கள் கவுசிக், சந்திப், சர்மிளா, சரண்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் நித்யானந்தன் செய்திருந்தார்.

