/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி 30வது ஆண்டு விழா
/
ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி 30வது ஆண்டு விழா
ADDED : ஏப் 28, 2024 01:54 AM

கோவை;வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் 30வது ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி தலைமை தாங்கினார். முதல்வர் அலமேலு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பெங்களூரு ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் மேனுபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சீனிவாசன் பாலசுப்ரமணியன் பங்கேற்றார்.
விழாவின் ஒரு பகுதியாக கல்லுாரியில், 25 ஆண்டுகள் பணியாற்றி துவக்க நாள் முதல், சிறப்பாக சேவையாற்றி வரும் பேராசிரியர்கள், அலுவலர்கள், காப்புரிமை பெற்று சாதனை படைத்த பேராசிரியர்கள், சிறந்த ஆராய்ச்சி புரிந்த பேராசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

