ADDED : ஜூலை 15, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியினர் 49.2 ஓவரில் 240 ரன் எடுத்தனர். வெங்கட பிரசன்னா 76, சூர்ய பிரசன்னா 36, நரசிம்மன் 34 ரன் எடுத்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியினர் 45.5 ஓவரில் 243 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். சாய் சித்தார்த் 48, கிரிஷ் மந்திர் 41, ஹரிஷ் ராகவ் 30 ரன் எடுத்தனர்.
