/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெக்ஜியம் ஹேக்கத்தானில் ராமகிருஷ்ணாவுக்கு வெற்றி
/
டெக்ஜியம் ஹேக்கத்தானில் ராமகிருஷ்ணாவுக்கு வெற்றி
ADDED : மே 23, 2024 04:39 AM

கோவை: எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனம், பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்காக டெக்ஜியம் ஹேக்கத்தானை, கடந்த 2017 முதல் நடத்தி வருகிறது.
நடப்பாண்டு போட்டியில், இந்தியாவின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் முன்னணி பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த, 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பல கட்டங்களாக நடந்த போட்டியில், துடியலுார், வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி மாணவர்கள், இரண்டாம் இடம் பிடித்து, ரூ.ஐந்து லட்சம் ரொக்கப்பரிசை வென்றனர்.
பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரி, சரண்யா ஆகியோரின் மேற்பார்வையில், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் ஜோசிக்கா, ஜீவமீனா, ஜனனிஸ்ரீ, அருண்ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சமர்ப்பித்த, 'டிஜிட்டல் வெல் மானிட்டர் புரோட்டோடைப்' என்ற படைப்புக்கு, பரிசு வழங்கப்பட்டது. மதிப்பிற்குரிய பணியாளர் தேர்வுக்கான விருது, பேராசிரியர் சிந்தாமணி மேற்பார்வையில், மாணவர்கள் ஹரிஷ், தீரஜ், ஆதித்யன், தினேஷ் ஆகியோர் சமர்ப்பித்த, 'பனானா பைபர் ஆட்டோ'விற்கு வழங்கப்பட்டது.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, கல்லுாரி முதல்வர் அலமேலு, கல்லுாரியின் தொழில்துறை மையத்தின் தலைவர் கணேஷ் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.

