/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெருமாள் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
/
பெருமாள் கோவிலில் ராமாயண சொற்பொழிவு
ADDED : ஏப் 13, 2024 12:52 AM
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது.
அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 19ம் ஆண்டு ராமநவமி விழா கடந்த 8 ம் தேதி துவங்கியது. மாலையில் பேச்சாளர் மகேஸ்வரி சத்குரு, 'அற்புத அயோத்தி' என்னும் தலைப்பில் முதல் நாள் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இதை அடுத்து தினமும் மாலை 7:00 முதல் 8:30 மணி வரை சொற்பொழிவு நடக்கிறது. இன்று (13ம் தேதி) மாலை நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. நாளை மாலை 'இலங்கை சகோதரர்கள்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
15ம் தேதி 'செஞ்சோற்று கடன்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. நிறைவு நாள் சொற்பொழிவு வரும் 17ம் தேதி 'பட்டாபிஷேகம்' என்னும் தலைப்பில் நடக்கிறது.

