/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கார்டுதாரர் கைரேகை பதிவு: தாலுகா ஆபீசில் சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டுதாரர் கைரேகை பதிவு: தாலுகா ஆபீசில் சிறப்பு முகாம்
ரேஷன் கார்டுதாரர் கைரேகை பதிவு: தாலுகா ஆபீசில் சிறப்பு முகாம்
ரேஷன் கார்டுதாரர் கைரேகை பதிவு: தாலுகா ஆபீசில் சிறப்பு முகாம்
ADDED : மார் 07, 2025 08:19 PM

வால்பாறை::
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு சிறப்பு முகாம் வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,701 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 47 ரேஷன்கடைகள் வாயிலாக மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
'நெட் ஒர்க்' பிரச்னையால், வால்பாறை நகரை தவிர பிற எஸ்டேட் பகுதியில் கைரேகை பதிவு வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில், ரேஷன் கடைகளில் கைரேகையினை பதிவு செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடக்கிறது.
வால்பாறை தாலுகா அலுவலகத்தில் நடக்கும் முகாமில், எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது கைரேகையினை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறியதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்கள் ரேஷன்கார்டில் இடம் பெற்றிருப்பவர்கள் கைரேகையை பதிய வேண்டும்.
ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கும் வகையிலும், குடும்ப உறுப்பினர்கள் குறித்த விபரங்கள் அறியவும் கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு செய்வதின் காரணமாக, குடும்பத்தில் இருப்பவர்களின் விபரமும் தெரியவரும்.
இவ்வாறு, கூறினார்.