/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
23ம் தேதி ஆகியும் பாமாயில் கிடைக்கல: ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி

ADDED : ஆக 23, 2024 10:47 PM
அன்னுார்:'அன்னுாரில் இரண்டாவது மாதமாக, பாமாயில் வழங்கப்படவில்லை,' என புகார் எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படுகிறது. இதில் அரிசி குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொறுத்து, 12 கிலோ முதல் 20 கிலோ வரை வழங்கப்படுகிறது. சர்க்கரையும் சரியாக வழங்கப்படுகிறது. ஆனால் கோதுமை பல மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வெளி சந்தையில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோ 200 ரூபாயை தாண்டி விட்டது. ரேஷன் கடையிலும் ஒரு மாதம் வழங்கினால் அடுத்த மாதம் தருவதில்லை.
இதுகுறித்து ஏ.எம். காலனி மக்கள் கூறுகையில்,'23ம் தேதி ஆகிவிட்டது. ஆனால் பாதி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே பாமாயில் கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டனர். கடந்த மாதம் பாமாயில் வாங்காதவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த மாதம் பாமாயில் வாங்காதவர்கள், அடுத்த மாதம் முதலில் பெற்றுக் கொள்ளலாம் என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு ஒவ்வொரு மாதமும் பருப்பு மற்றும் பாமாயில் தவறாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.