ADDED : மே 11, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, இடையர்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்துவதாக, தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் இடையர்பாளையம் பகுதியில், வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மொபட்டில் இரண்டு மூட்டையில், 40 கிலோ ரேஷன் அரிசியுடன் வந்த நபரை பிடித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 43 என்பது தெரிந்தது. அவர் இடையர்பாளையம் பகுதிகளில், குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி அதிக விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு, விற்பணை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த, 33 மூட்டை, 1320 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அவரது மொபட்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.