/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடை இடமாற்றம் கார்டுதாரர்கள் 'நடையாய் நடை'
/
ரேஷன் கடை இடமாற்றம் கார்டுதாரர்கள் 'நடையாய் நடை'
ADDED : மே 31, 2024 02:01 AM
கோவை;பீளமேடு ரொட்டிக்கடை மைதானம் அருகே மாநகராட்சி கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட அனுமதிக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிற்கு, 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா அனுப்பியுள்ள மனுவில்,'பீளமேடு பட்டாளம்மன் கோவில் வீதியில் செயல்பட்டுவந்த ரேஷன் கடை மூன்று மாதங்களுக்கு முன் எல்லை தோட்டம் ரோடு, ராயப்பன் வீதிக்கு மாற்றப்பட்டது.
இதனால், ஏ.டி., காலனி, பயனீர் மில் ரோடு, காவலர் குடியிருப்பு, மங்குத்தாயம்மாள் வீதியில் வசிப்பவர்கள், 2 கி.மீ., நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
பெண்கள், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பலர் ஆட்டோ வாடகை கொடுத்து பொருட்களை ஏற்றிவருகின்றனர்.
பீளமேடு ரொட்டிக்கடை மைதானம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. இக்கட்டடத்துக்கு ரேஷன் கடை தரப்பில் வாடகை செலுத்தவும் தயாராக உள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடையை இக்கட்டடத்துக்கு மாற்ற அனுமதிக்குமாறு வேண்டுகிறோம்' என, தெரிவித்துள்ளார்.