/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மகளிர் மாநாடு
/
ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மகளிர் மாநாடு
ADDED : ஜூலை 03, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க, மாநில மகளிர் பிரிவு அணி மாநாடு, கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.
ரேஷன்கடை பணியாளர்களுக்கு தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்றவாறு புதிய ஊதியம் வழங்கிட அரசாணை வெளியிடப்பட வேண்டும், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கழிப்பிட வசதி ஏற் படுத்தி தரப்பட வேண்டும் உட்பட, 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மகளிரணி தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். பொருளாளர் சிவசாமி வரவேற்றார்.