/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரை நுாற்றாண்டாக சிறந்த சேவையில் ரத்தினம் கல்வி குழுமம்
/
அரை நுாற்றாண்டாக சிறந்த சேவையில் ரத்தினம் கல்வி குழுமம்
அரை நுாற்றாண்டாக சிறந்த சேவையில் ரத்தினம் கல்வி குழுமம்
அரை நுாற்றாண்டாக சிறந்த சேவையில் ரத்தினம் கல்வி குழுமம்
ADDED : மே 06, 2024 01:23 AM
ரத்தினம் கல்வி குழுமங்கள், கடந்த 50 ஆண்டுகளாக காலத்திற்கேற்ப கல்வி சேவையில் மாற்றங்களை ஏற்படுத்தி, மாணவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது.
இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைவர் மதன் ஆ செந்தில் கூறியதாவது:
கல்வித்துறையில் இப்போது மிகப்பெரிய மாற்றம் வந்துவிட்டது. தற்போது தொழில்நிறுவனங்கள் வேலைக்கு மாணவர்களை எடுக்கும் போது பயிற்சியளித்து, வேலையில் அமர்த்த விரும்புவதில்லை.
வேலைக்கு சேரும் முதல் நாளில் இருந்தே பணியில் ஈடுபட வேண்டுமென நினைக்கின்றனர். இதனையே 'தொழிலில் மூழ்குதல்' என்கின்றனர். ரத்தினம் கல்விக் குழுமங்களில் 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ளதால் மாணவர்கள் எளிதில் பயிற்சி பெறுகின்றனர். இந்த கற்றல் முறை அனுபவத்துடன் கற்றல், தொழில்நிறுவனங்களோடு இணைந்து கற்றல், பயிற்சியாளரோடு கற்றல் என மூன்று முறைகளில் கற்கின்றனர்.
இந்த கற்றல் முறையானது மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. கடந்த ஆண்டில், ஆண்டிற்கு 58 லட்சம் ரூபாயில் வேலைவாய்ப்பும், அதனைத்தொடர்ந்து 45 லட்சம் ரூபாயில் வேலைவாய்ப்பும் பெற்றுள்ளனர். 200க்கும் மேற்பட்ட முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் ஆண்டிற்கு 6 லட்சம் ரூபாயில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் வேலைவாய்ப்பினை பெற்றுத்தரும் வகையில் உள்ளது. இங்கு செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், மெஷின் லேர்னிங் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்களுடன் , திறமையான ஆசிரியர்களின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிது. இவ்வாறு தெரிவித்தார்.