/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் அங்கீகாரம்
/
சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் அங்கீகாரம்
ADDED : ஏப் 02, 2024 11:43 PM
கோவை;நீலாம்பூர், கதிர் பொறியியல் கல்லுாரியில், ஆண்டு விழா பிரமாண்டமாக கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கதிர் கல்வி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கதிர் தலைமை வகித்தார்.
விழாவில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரியின் டாக்டர் மணிவண்ணன், டாக்டர் ரவீந்திரன், இ.எஸ்.ஐ., மருத்துவ மனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இசை, நடனம், நாடகம் என தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள், பல்வேறு கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
கல்வி, விளையாட்டு, கலைத்துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, விருந்தினர்கள் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
கதிர் நிறுவனத்தின் செயலாளர் லாவண்யா, கதிர் பொறியியல் கல்லுாரியின் முதல்வர் உதயகுமார், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

