/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
16.30 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
16.30 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றம்
16.30 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றம்
16.30 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு; ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஆக 01, 2024 12:59 AM

சூலுார் : கோவை அருகே, ரூ. 300 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன.
அவற்றில் சில ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. அவற்றை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கையை கடந்தாண்டு டிச., மாதத்தில் அறநிலையைத்துறை மேற்கொண்டது.
இதையடுத்து, சர்வே எண்கள் 283/1 மற்றும் 457 / 1 இல், மொத்தம், 16.30 ஏக்கர் நிலம் மீட்கும் பணி நேற்று நடந்தது. சட்டப்பிரிவு 78 கீழ், நிலத்தை மீட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீட்கப்பட்ட நிலம் ரூ. 300 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை உதவி கமிஷனர் ( கூடுதல் பொறுப்பு) மேனகா தலைமையில், கோவில் தக்கார் தன்ராஜ், தனி தாசில்தார் குமரி ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
'இது கோவிலுக்கு சொந்தமான இடம். இந்நிலத்தில் அந்நியர்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.