/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவப்பு விளக்கு! வாகனங்களில் பொருத்தினால் நடவடிக்கை என எச்சரிக்கை
/
சிவப்பு விளக்கு! வாகனங்களில் பொருத்தினால் நடவடிக்கை என எச்சரிக்கை
சிவப்பு விளக்கு! வாகனங்களில் பொருத்தினால் நடவடிக்கை என எச்சரிக்கை
சிவப்பு விளக்கு! வாகனங்களில் பொருத்தினால் நடவடிக்கை என எச்சரிக்கை
ADDED : மார் 02, 2025 04:58 AM

கோவை,: தனியார் வாகனங்களில் சிவப்பு, நீலம் வண்ணங்களில் ஒளிரும் விளக்குகளை பொருத்தினால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு அதிகாரிகள் வாகனங்கள் வருவதை பிற வாகன ஓட்டிகள் கண்டறியும் வகையில், அரசு வாகனங்களில் சிவப்பு, நீலம் வண்ணங்களில் (சைரன் விளக்கு) விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் வருகையின் போதும், சைரன் லைட் பயன்படுத்தப்படுகிறது.
தனியார் வாகனங்களிலும்...
மாநகருக்கு விசிட் அடிக்கும் அமைச்சர்களின் காருக்கு பின்னால், வரும் கட்சியினர் கார்களிலும் சைரன் விளக்குகள் பொருத்தப்படுகின்றன.
அமைச்சரின் பந்தோபஸ்து பணிக்கு செல்லும் போலீசார் போல், கட்சியினரும் சைரன் லைட்டுகளை மாட்டிக்கொண்டுவலம் வருகின்றனர். இவர்களை பின்பற்றி, இப்போது தனியார் வாகனங்களிலும் சிலர் சிவப்பு, நீல விளக்குகளை பொருத்தி வலம் வருவதை காண முடிகிறது.
கடைகளில் விற்கப்படும், இது போன்ற சைரன் லைட்டுகள் அனைத்தும், எல்.இ.டி., லைட்டுகள். இரவு நேரங்களில் சிவப்பு, நீலம் என மாறி, மாறி ஒளிரும் இந்த விளக்குகள், எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகள் கண்களில் நேராக வெளிச்சத்தை பாய்ச்சி, கூசச் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
'வழக்கு பதிவு நடவடிக்கை'
இது குறித்து, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக் கூறுகையில், ''பல தனியார் வாகனங்களில், சைரன் போன்ற சிவப்பு, புளூ எல்.இ.டி., லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அவ்வகையில், விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு, லைட் அகற்றப்படுகிறது. போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்களிலும், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைரன் போன்ற லைட் விற்பனை செய்யும் கடைகளும், நோட்டீஸ் அனுப்பி கண்காணிக்கப்படுகின்றன,'' என்றார்.