/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணம் திரும்ப கிடைச்சிருச்சு; சூலுாரில் 11 பேர் மகிழ்ச்சி
/
பணம் திரும்ப கிடைச்சிருச்சு; சூலுாரில் 11 பேர் மகிழ்ச்சி
பணம் திரும்ப கிடைச்சிருச்சு; சூலுாரில் 11 பேர் மகிழ்ச்சி
பணம் திரும்ப கிடைச்சிருச்சு; சூலுாரில் 11 பேர் மகிழ்ச்சி
ADDED : ஏப் 02, 2024 11:42 PM
சூலூர்;பறிமுதல் செய்யப்பட்ட பணம், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், சூலூரில், 11 பேர் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதலே, பறக்கும் படையினர் பம்பரமாய் சுழற்சி முறையில் சுற்றி, ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சூலூர் தொகுதியில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் என, 18 குழுக்கள், இதுவரை, 26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான உரிய ஆவணங்களை, 11 பேர் திரும்ப ஒப்படைத்திருந்தனர். இதையடுத்து, அவர்களுக்குரிய, 18 லட்சம் ரூபாய் பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசி ஒப்படைத்தார். பணம் திரும்ப கிடைத்ததால், 11 பேரும் மகிழ்ச்சியடைந்தனர்.