/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல விளையாட்டு போட்டி; பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
மண்டல விளையாட்டு போட்டி; பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 01, 2024 12:41 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பள்ளிகளுக்கு இடையே மண்டல அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டியானது, லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்தது. போட்டியை, கல்லுாரி முதல்வர் மாணிக்கச் செழியன் முன்னிலையில், கல்லுாரி நிர்வாக மேலாளர் ரகுநாதன் துவக்கி வைத்தார்.
மாணவர் பிரிவில், பால்பேட்மிட்டன் போட்டியில் பழனிகவுண்டர் பள்ளி அணியும், என்.ஜி.என்.ஜி., பள்ளி அணியும் மோதின. இதில் 39-17 என்ற புள்ளிக் கணக்கில், என்.ஜி.என்.ஜி., அணி வென்றது.
கால்பந்து போட்டியில், பி.கே.டி., அணி, விஸ்வதீப்தி பள்ளி அணியுடன் மோதியது. இதில், பி.கே.டி., அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
கோ-கோ பிரிவில், கந்தசாமி பள்ளி அணி, திவான்சாபுதுார் அரசு பள்ளி அணியுடன் மோதி, 16-14 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.கபடி, மாணவர் பிரிவில், பழனிகவுண்டர் பள்ளி அணி, 41-31 புள்ளிக் கணக்கில் திவான்சாபுதுார் அரசு பள்ளி அணியை வென்றது.
கூடைப்பந்து போட்டியில், பிரசன்டேஷன் அணியும், விஸ்வதீப்தி அணியும் மோதின. இதில், 18-15 என்ற புள்ளிக் கணக்கில் விஸ்வதீப்தி அணி வெற்றி பெற்றது.
மாணவியர் பிரிவில், டேபிள் டென்னிஸ் போட்டியல், பூளவாடி அரசு பள்ளி அணி, 2-1 என்ற செட்கணக்கில் பிரசன்டேஷன் பள்ளி அணியை வென்றது.
மாரியம்மாள் பள்ளி அணி, 39-22 என்ற புள்ளிக் கணக்கில், என்.ஜி.என்.ஜி., அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது.
வாலிபால் போட்டியில், செஞ்சேரிமலையடிப்பாளையம் அரசு பள்ளி அணி, 2-1 செட்கணக்கில், மாரியம்மாள் பள்ளி அணியை வென்றது.
பரிசளிப்பு விழாவில், கல்லுாரி நிர்வாக இயக்குனர் முனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் கேசவகுமார், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் விளையாட்டு சீருடைகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.